India
தெலுங்கானா: பிறந்தநாள் விழாவுக்கு சென்ற சிறுமி..ஜூஸில் மயக்கமருந்து கொடுத்து வன்கொடுமை..5 இளைஞர்கள் கைது!
தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் கணவரை பிரிந்து வாழும் பட்டியலின பெண் ஒருவர் தனது 16 வயது மகளோடு வசித்து வருகிறார். தாய் கூலித்தொழியாளியாக பணிபுரிந்து வரும் நிலையில், வறுமையின் காரணமாக அந்த சிறுமி பள்ளிக்கு செல்லாமல் கிடைக்கும் வேலையே செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், சிறுமியின் தோழி ஒருவர் தன்னுடைய பிறந்தநாள் விழாவுக்கு அந்த சிறுமியை அழைத்துள்ளார். அதன்படி கடந்த 4-ம் தேதி சிறுமியின் தோழியின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து இருவரும் தோழியின் காதலர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அங்கு தோழியின் காதலரின் 5 நண்பர்கள் இருந்துள்ளனர். பின்னர் நள்ளிரவில் கேக் வெட்டப்பட்டு அனைவரும் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய நிலையில், சிறுமியின் தோழி மற்றும் அவரின் காதலர் ஆகியோர் மட்டும் தனி அறைக்கு செல்ல சிறுமி வெளியிலேயே இருந்துள்ளார்.
அப்போது அங்கிருந்த இளைஞர்கள் சிறுமிக்கு ஜூஸ் ஒன்றை கொடுத்துள்ளனர். அதை சிறுமி குடித்த நிலையில் மயக்கமடையும் நிலைக்கு சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமியை அந்த இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர் அதிகாலை அங்கிருந்து தப்பித்த அந்த சிறுமி தனது வீட்டுக்கு சென்று தாயாரிடம் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் முதலில் சிறுமியின் தோழி மற்றும் அவரின் காதலியை கைது செய்தனர். பின்னர் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த இளைஞர்கள் அனைவரும் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்டவர்கள் என போலிஸார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!
-
“தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி!” : முதலீடுகளை ஈர்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
தொடர்ந்து 4 நாட்களாக சசிகாந்த் உண்ணாவிரத போராட்டம்.. முதலமைச்சரின் கோரிக்கைக்கு இணங்க போராட்டம் முடிவு!
-
"நயினார் நாகேந்திரன் தேவையில்லாமல் வாயை கொடுத்து மாட்டிக்கொள்கிறார்" - அமைச்சர் TRB ராஜா பதிலடி !