India
விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த அதிர்ச்சி.. சர்ச்சையில் சிக்கிய Indigo!
ஏர் இந்தியா தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டதில் இருந்து விமான நிறுவனங்கள் சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருகிறது. விமான தொழில்நுட்ப சிக்கல்கள் தொடங்கி பணியாளர் நடத்தை வரை பல்வேறு விவகாரங்கள் பொதுவெளிக்கு வந்த விமர்சனத்தை ஏற்படுத்திவருகிறது.
அதிலும் இண்டிகோ நிறுவனம் தற்போது தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் தரையிறங்கியதில் இருந்து நடுவானில் ஆக்சிஜன் பற்றாக்குறை வரை இண்டிகோ நிறுவனத்தின் பெயர் பெரிய அளவில் அடிபட்டுள்ளது.
அதுதவிர ஹிந்தி மொழிக்கு முன்னுரிமை, பிராந்திய மொழிகள் புறக்கணிப்பு தொடங்கி பயணிகளை அவமரியாதை செய்வது எனவும் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை பலர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இண்டிகோ நிறுவனம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
நேற்று ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்துக்கு இண்டிகோ நிறுவனத்துக்கு சொந்தமான 6E 409 என்ற விமானம் சென்றுள்ளார். ஆனால், விசாகப்பட்டினம் சென்று இறங்கிய பயணிகளுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது அந்த விமானத்தில் பயணம் செய்த 37 பயணிகளின் லக்கேஜ்கள் விமானத்தில் ஏற்றபடவேயில்லை என்ற விவரம் தெரியவந்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் பணியாளர்களின் அலட்சியபோக்கு காரணமாக பயணிகளின் உடமைகள் கொச்சி விமான நிலையத்திலேயே இருந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இண்டிகோ நிறுவனம், "ஹைதராபாத்தில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு புறப்பட்ட 6E 409 விமானத்தில் பயணிகளின் 37 பைகள் கவனக்குறைவாக விட்டுச் சென்றதற்கு வருந்துகிறோம். பயணிகளின் உடமைகள் பயணிகளின் முகவரிகளுக்கு பாதுகாப்பாக வழங்கப்படும்" என்று கூறியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!
-
150 ஆவது பொய் - முதுகெலும்பு இல்லாத பழனிசாமியால் இது முடியுமா? : வெளுத்து வாங்கிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி... விண்ணப்பிப்பது எப்படி?
-
3 நாட்களுக்கு AI & Digital Marketing பயிற்சி... தமிழ்நாடு அரசின் அறிவிப்பின் விவரம் உள்ளே!