India
115 கி.மீ.. மனைவியின் உடலை தோளில் தூக்கிக் கொண்டு சாலையில் நடந்த கணவன்: தெலங்கானா போலிஸார் செய்த உதவி!
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சாமுலு - ஈடே குரு. இந்த தம்பதி ஆந்திராவில் தங்கி வேலைபார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு மனைவி ஈடே குருவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் தகரபுலசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.
இதனால் மனைவியை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்து ஒடிசாவில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இதன்படி கையிலிருந்த முழு பணத்தையும் செலவு செய்து மனைவியை ஆட்டோவில் ஏற்றி ஒடிசாவிற்குச் சென்று கொண்டிருந்தார்.
பின்னர் விஜயநகரம் மாவட்டம் அருகே சென்றபோது ஈடே குரு உயிரிழந்துள்ளார். இதனால்ஆட்டோவை இனி ஓட்ட முடியாது என கூறிவிட்டு இவர்களைக் கீழே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். கையில் பணமும் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல், மனைவி உடலை தோளில் சுமந்து கொண்டு சாமுலு நின்று கொண்டே இருந்துள்ளார். பிறகு 115 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது வீட்டிற்கு மனைவியின் உடலை தோளில் சுமந்து கொண்டே நெடுஞ்சாலையில் நடந்து சென்றுள்ளார்.
இதைப்பார்த்த கிராம மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அங்கு வந்த போலிஸார் அவரிடம் விசாரணை செய்து அவரது நிலையைப் புரிந்து கொண்டனர். பிறகு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்து சாமுலுவையும் அரவது மனைவி உடலையும் அதில் ஏற்றி ஒடிசாவிற்கு அனுப்பிவைத்தனர். செல்லும் போது கண்ணீருடன் போலிஸாருக்கு சாமுலு நன்றி தெரிவித்துள்ளார். போலிஸாரின் இந்த செயலைப் பார்த்து பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!