India
தவமிருந்து பெற்ற குழந்தைக்கு நிமோனியா.. குணமாக்க மூடநம்பிக்கையில் பெற்றோர் செய்த செயலால் நேர்ந்த சோகம் !
மத்திய பிரதேசம் மாநிலம் ஷாதோல் என்ற பகுதியில் கிராமம் ஒன்று உள்ளது. அங்கு பழங்குடியின மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதியில் தம்பதி ஒருவர் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
பிறந்த அந்த குழந்தை ஆரம்பத்தில் நலமுடன் இருந்துள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு எதோ நோயால் அவதிப் பட்டுள்ளது. விடமால் காய்ச்சலும் அடித்துள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் அங்கிருக்கும் மூத்தோர்களிடம் கேட்டுள்ளனர். அவர்களோ குழந்தையின் வயிற்றில் இரும்பு கம்பியை கொண்டு சூடு வைத்தால் இந்த நோய் சரியாகி விடும் என்றும் யோசனை கொடுத்துள்ளனர்.
அதன்படி குழந்தையின் பெற்றோரும், பச்சிளம் பிள்ளை என்றும் பாராமல் ஒரு இரும்பு கம்பியை பழுக்க சூடேற்றி அதன் வயிற்றில் குத்தியுள்ளனர். தொடர்ந்து 51 முறை குத்தி உள்ளனர். இதனால் குழந்தை கதறி அழவே, அதற்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டதும் பதறி போன பெற்றோர், உடனே அந்த குழந்தையை அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கே குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சுமார் 15 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வந்த அதிகாரிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட ஆட்சியர் கூறும்போது, "குழந்தைக்கு நிமோனியா என்றதும் பெற்றோர்கள் அந்த ஊர் மக்களின் அறிவுறுத்தல்படி சூடு வைத்துள்ளனர். குழந்தை கதறி அழும்போது அங்கிருந்த அங்கன்வாடி பணியாளர் ஒருவர் வேண்டாம் என்று கூறியுள்ளார். இருப்பினும் அதனை பொருட்படுத்தாமல் அந்த ஊர் மக்கள் சேர்ந்து குழந்தைக்கு சரி ஆக வேண்டும் என்று சூடு வைத்துள்ளனர்.
இதனால் குழந்தையின் உடல்நிலை மோசமடைந்து, தற்போது உயிரிழந்துள்ளது. மக்களிடையே நிலவும் இது போன்ற மூட நம்பிக்கைகள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்" என்றார். நிமோனியாவால் பாதிக்கப்பட்ட 3 மாத குழந்தையை குணமாக்க அவரது வயிற்றில் சூடான இரும்பு கம்பியை கொண்டு 51 முறை குத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மூட நம்பிக்கை காரணமாக கேரளாவில் பணக்காரர் ஆக வேண்டும் என்று பேராசையில், போலி சாமியாரின் பேச்சை கேட்டு இரண்டு பெண்களை நரபலி கொடுத்து, அந்த உடலை பச்சையாக திண்றுள்ள சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
"SIR உண்மையான வாக்காளர்களை நீக்குவதற்கான தந்திரம் மட்டுமே" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
“S.I.R-க்கு எதிராக ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
உச்சநீதிமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் வழக்கு தாக்கல் செய்யும்!: அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் தீர்மானம்!
-
SIR விவகாரம் : முதலமைச்சர் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்... 40 கட்சிகள் பங்கேற்பு! - விவரம்!
-
ஒக்கியம் மடுவு கால்வாயில் ரூ.27 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு!