India

சொந்த அண்ணனை திருமணம் செய்த தங்கை.. வெளிநாடு செல்லவேண்டும் என்ற ஆசையால் நேர்ந்த அவலம்.. போலீஸ் விசாரணை !

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சேர்ந்த பெண் ஒரொருவரின் அண்ணன் ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். அண்ணன் அனுப்பிய புகைப்படங்கள் மற்றும் செய்திகளை பார்த்து அந்த பெண்ணுக்கும் ஆஸ்திரேலியா செல்ல ஆசை வந்துள்ளது.

இதனால் அண்ணனிடம் தன்னை ஆஸ்திரேலியா அழைத்துச்செல்ல அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விசா கிடைப்பது கடினம் என அண்ணன் கூறியுள்ளார். அப்போது தம்பதிகளில் ஒருவருக்கு விசா இருந்தால், மற்றவருக்கு விசா கிடைப்பது ஆஸ்திரேலியாவில் எளிது என்ற செய்தி இருவரையும் எட்டியுள்ளது.

இதனால் இருவரும் விபரீத யோசனைக்கு வந்துள்ளனர். அதாவது இருவரும் திருமணம் செய்ததாக சான்றிதழை காட்டினால் அந்த பெண்ணுக்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விசா கிடைக்கும் என்பதும் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

பின்னர் அண்ணன் இந்தியா வந்ததும் பஞ்சாபில் உள்ள ஒரு குருத்வாராவில் அண்ணனும் தங்கையும் திருமணம் செய்து கொண்டு அருகிலுள்ள திருமண பதிவு அலுவகத்தில் பதிவு செய்து கணவன் -மனைவி என சான்றிதழ் வாங்கியுள்ளனர்.

பின்னர் அதனை கொண்டு விசாவுக்கு விண்ணப்பித்த நிலையில், அந்த பெண்ணுக்கு எளிதில் விசா கிடைத்து அவர் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பின் போது இரு நாட்டு அரசு அதிகாரிகளை ஏமாற்றி அண்ணன்-தங்கை திருமணம் செய்து ஆஸ்திரேலியா வந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த அண்ணன்-தங்கை குறித்து பஞ்சாப் போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல் ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, "சகோதரன் ஏற்கனவே ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பவர் என்றும், சகோதரி போலி ஆவணங்களை தயாரித்து ஆஸ்திரேலியா சென்றுள்ளனர். இதில் அவர்கள் குடும்பத்தை சேர்ந்த 6 பேர் சம்பந்தப்பட்டுள்ளனர்" எனக் கூறியுள்ளார். இந்த சம்பவம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 500 மாணவிகள்.. தனி ஒருவனாகத் தேர்வு எழுத வந்த 12ம் வகுப்பு மாணவனுக்கு நடந்த அதிர்ச்சி! (video)