India
மனைவியை கொன்று உடலை ஆற்றின் அருகே புதைத்த கணவன்.. விசாரணையில் போலிஸ் ஷாக்!
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்திற்குட்பட்ட ஃபசல்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் தினேஷ் பிரஜாபதி. இவரது மனைவி அஞ்சு. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் ஜனவரி 30ம் தேதி தனது மனைவியைக் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது மூன்று குழந்தைகளிடம் விசாரணை நடத்தியபோது, 'தனது தாய் பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளதாக அப்பா' சொன்னதாக கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் தினேஷ் பிரஜாபதியிடம் தீவிரமாக விசாரணை செய்தபோது திடுக்கிடும் தகவல் வெளியானது.
தம்பதிகள் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. மேலும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக தினேஷ் பிரஜாபதி சந்தேகித்து வந்துள்ளார். கடந்த 24ம் தேதி காய்கறி சந்தைக்குச் சென்றபோது தம்பதிக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.
அப்போது மனைவி கழுத்தை நெரித்து தினேஷ் பிரஜாபதி கொலை செய்துள்ளார். பிறகு அவரது உடலை வீட்டில் இருக்கும் மற்றொரு அறையில் மறைத்து வைத்துள்ளார். பின்னர் குழந்தைகள் தூங்கிய பிறகு இரவில் யாருக்கும் தெரியாமல் கிராமத்தில் வெளியே இருக்கும் ஆற்றின் அருகே சடலத்தை புதைத்துள்ளார். இந்த சம்பவம் போலிஸாரின் விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.
இவரின் வாக்குமூலத்தை அடுத்து அங்க சென்று ஜேசிபி உதவியுடன் சடலத்தைத் தோண்டி எடுத்து போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர். சந்தேகத்தால் மனைவியை கொன்று உடலை கணவன் புதைத்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!