India
ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்ற பெண் நடுரோட்டில் சுட்டுக்கொலை: டெல்லியில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள்!
டெல்லியின் பஸ்சிம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி. இவர் கடந்த ஒருமாதத்திற்கு முன்புதான் உத்யோகர் நகர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துள்ளார். இவர் தினமும் ஸ்கூட்டரில் வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வேலைக்குச் சென்றுவிட்டு இரவு ஸ்கூட்டரில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது, பஸ்சிம் விஹார் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்துத் தடுத்து நிறுத்தியுள்ளார். பிறகு தான் மறைத்து எடுத்து வந்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜோதியைச் சுட்டுக் கொலை செய்துள்ளார்.
பின்னர் ஜோதி வந்த ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ஜோதி உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கூறுகையில், "மகளுக்கு யாருடனும் எந்தவிதமான பகையோ அல்லது தகராறோ எதுவும் இல்லை. தனது மகளைக் கொன்ற நபரை விரைவில் கைது செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து மூன்று குழுக்களாகப் பிரித்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து ஜோதியைச் சுட்டுக் கொன்ற மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
டெல்லியில் கடந்த சில மாதங்களாகவே கொலை குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்மையில் கூட இளம் பெண் ஒருவர் காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி சாலையில் தனியாகச் செல்லும் பெண்கள் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
நேபாள வெள்ளம்.. சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க வேண்டும்: வெளியுறவுத்துறைக்கு தயாநிதி மாறன் எம்.பி. கடிதம்!
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?