India
ஒடிசா அமைச்சர் மீது துப்பாக்கியால் சுட்ட காவல் ஆய்வாளர்.. பாதுகாப்பு கொடுக்கவேண்டியவரே உயிரை பறித்த சோகம்
ஒடிசா மாநிலத்தில் தற்போது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அனைத்து மாநிலங்களில் நிலவும் அதே அரசியல் மோதல்கள் அடிக்கடி காணப்படும். இங்கு சுகாதாரத் துறை அமைச்சர் இருப்பவர் நபா தாஸ்.
இந்த நிலையில் நபா தாஸ் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இன்று ஒடிசாவின் ஜர்சுகுடா பகுதியிலும் பிரஜாராஜ் நகரில் பொது விழா ஒன்று நடைபெற்றது. இதை சிறப்பு விருந்தினாக அமைச்சர் தாஸ் கலந்துகொண்டார். அப்போது அவரது பாதுகாப்புக்கு அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அவருக்கு அங்கிருந்த பொதுமக்கள் வரவேற்பும் கொடுத்தனர்.
தொடர்ந்து அவர் உள்ளே சென்று கொண்டிருந்தபோது அவர் மீது மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். அவரது மார்பு பகுதியில் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அமைச்சரை அருகிலிருந்த அதிகாரிகள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து சக அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அங்கிருந்த காவல் உதவி ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர்தான் அமைச்சரை சுட்டதாக தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறை அதிகாரிகள் உடனே அதிரடியாக கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அதிகாரியை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர், மேல் சிகிச்சைக்காக புவனேஸ்வர் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கும் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கடந்த சில மணி நேரங்கள் வரை தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தொடர்ந்து காவல் அதிகாரி, அமைச்சரை எதற்கு துப்பாக்கியால் சுட்டார் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. காவல் ஆய்வாளரே ஒரு அமைச்சர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில், அவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒடிசாவில் மட்டுமல்ல நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த அமைச்சருக்கு வயது 61.
Also Read
-
தேர்தல் ஆணையத்தை கைப்பாவையாக பயன்படுத்த முயல்கிறது ஒன்றிய பாஜக அரசு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் அதிகரித்த நெல் கொள்முதல்- விவசாயிகளுக்கான திட்டங்களை பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு !
-
தொடர்ந்து வலுவடையும் மோந்தா புயல்... தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு ? கரையை கடக்கும் இடம் என்ன ?
-
தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு மறு ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை
-
நண்பரின் பைகளை நிரப்புவதில் மோடி மும்முரமாக இருப்பது ஏன்? : மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!