India

“குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படத்தை வெளியிட்ட BBC” - தடை விதித்த ஒன்றிய அரசு - பின்னணி என்ன?

குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002–ம் ஆண்டு நடந்த கலவரத்தில் ஏராளமானோர் கொள்ளப்பட்டனர். இந்த கலவத்தில் சிறுபான்மையினர் மீது நடந்த திட்டமிட்ட தாக்குதல் என உலகம் முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கூட சம்பவத்தின்போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரின் குடும்பத்தினரையும் ஒரு இந்துத்துவ கும்பல் தாக்கியது.

அப்போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது. இதனிடையே பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி கடந்த 17-ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. அதில், “இந்தியா- மோடிக்கான கேள்விகள்” என்ற தலைப்பிலான அந்த ஆவண படத்தை வெளிட்டுள்ளது. இந்தப்படத்தில் பிரதமர் மோடியின் உண்மை முகம் அம்பலப்படுத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த ஆவணப்படத்தில் குஜராத் கலவரத்தின் போது, சிறுபான்மையினருக்கு எதிராக எடுக்கப்பட்ட வன்முறையை தடுக்க குஜராத் காவல்துறை எந்த முயற்சியையும் மேற்கொள்ளப்படாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆவணப் படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதன் 2-ம் பாகம் வரும் 24-ம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. பிபிசியின் இந்த ஆவணப்படத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.

Also Read: குஜராத் கலவரம் - கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு- குற்றவாளிகளை விடுவித்து பாஜக அரசு உத்தரவு !