India
1% பணக்காரர்களிடம் குவிந்த நாட்டின் 40% சொத்து..அதானிக்கு வரிவிதித்தால் என்ன ஆகும்? வெளியான ஆய்வு முடிவு!
கொரோனா தாக்கம், ரஷ்யா -உக்ரைன் போர் போன்ற காரணங்களால் உலக அளவில் பொருளாதாரத்தில் பெரும் மந்த நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக உலகெங்கும் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளது. அதோடு பங்கு சந்தைகளிலும் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இது போன்ற காரணங்களால் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதே காரணங்களால் உலகத்தின் பெரும் பணக்காரர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெப் பிசோஸ், ஏலான் மஸ்க், மார்க் சுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களின் சொத்து மதிப்பும் 60 பில்லியன் டாலர் அளவு கடுமையாக சரிந்துள்ளது.
உலக அளவில் ஏற்பட்டுள்ள இந்த பொருளாதர பாதிப்பு இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இந்தியாவின் ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவு சரிந்துள்ளது. ஆனால் இந்தியாவில் மட்டும் நாளுக்கு நாள் பணக்காரர்களின் சொத்து மதிப்பு அதிகரித்து வருவது பல்வேறு ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் வெளிவந்துள்ளது.
உலக பொருளாதார கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில் பிரிட்டனை சேர்ந்த 'ஆக்ஸ்ஃபேம் இண்டர்நேஷனல்' என்ற அமைப்பு இந்தியாவின் வருடாந்திர சமத்துவமின்மை அறிக்கையை நேற்று வெளியிட்டது. இந்த அறிக்கையில் இந்தியாவில் டாப் 1% பணக்காரர்களிடம் நாட்டின் 40% சொத்துகள் குவிந்துள்ளது என்றும், அடித்தட்டு மக்களிடம் வெறும் 3% சொத்துகள் மட்டுமே உள்ளது அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருவாய் ஈட்ட பல்வேறு வழிமுறைகளும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள டாப் 10 பணக்காரர்களுக்கு 5% வரி விதிப்பதன் மூலம் படிப்பில் இருந்து இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டுவரலாம் என்றும், அதானியின் விற்காமல் இருக்கும் சொத்தின் மீதான லாபத்துக்கு வரி விதிப்பதன் மூலம் ரூ.1.79 லட்சம் கோடி பெற்று இந்தியாவில் உள்ள 50 லட்ச தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஒரு ஆண்டு முழுவதும் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!
-
“2026 முதல் தமிழ்நாட்டு வளர்ச்சியின் அடுத்த பார்ட் தொடங்கப்போகிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
-
கள்ளக்குறிச்சியில் 2,16,056 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!