India
இவர்கள் ஸ்வெட்டர் அணியும் வரை நானும் ஸ்வெட்டர் அணிய மாட்டேன்: ராகுல் காந்தியின் முடிவிற்கு என்ன காரணம்?
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் தமிழ்நாட்டில் தொடங்கிய ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தர பிரதேசத்தை அடுத்து மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இவர் நடைபயணம் தொடங்கியதிலிருந்தே வெள்ளை நிற டி - ஷர்ட் மட்டுமே அணிந்து வருகிறார். இந்த டி- ஷர்ட்டுக்காக மட்டும் ராகுல் காந்தி பல கோடிகளைச் செலவு செய்ததாக பா.ஜ.க குற்றம் சாட்டினர். தற்போது மத்திய பிரதேசத்தில் கடும் குளிரலும் டி- ஷர்ட் மட்டுமே அணிந்து நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் கடும் குளிரிலும் டி- ஷர்ட் மட்டுமே அணிந்து வருவதற்கான காரணம் குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவரின் விளக்கத்தில், "நான் நடைபயணத்தை தொடங்கிய போது வெப்பமான வானிலையே இருந்து.
பல மாநிலங்களைக் கடந்து மத்திய பிரதேசத்திற்கு வந்தபோது குளிர் வந்துவிட்டது. இம்மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு மூன்று சிறுவர்களைப் பார்த்தேன். அவர்கள் இந்த கடும் குளிரில் ஸ்வெட்டர் கூட அணியாமல் நடுங்கிக் கொண்டிருந்தனர்.
அந்த சிறுவர்களே கடும் குளிரை தாங்கும்போது நம்மால் முடியாதா?. கடும் குளிர் என்னை வாட்டும் வரை நான் டி- ஷர்ட் மட்டுமே அணிவேன். அச்சிறுவர்களுக்கு எப்போது ஸ்வெட்டர் அணிந்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறதோ அப்போதே நானும் ஸ்வெட்டர் அணிவேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அநாகரிகமான பேச்சு” : அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு அனிதா ராதாகிருஷ்ணன் சாடல்!
-
திருச்சி ரயில் நிலையத்தில் Laptop திருடிய த.வெ.க நிர்வாகி : கைது செய்த காவல்துறை!
-
பதில் சொல்ல துப்பில்ல ; அதை விட்டுட்டு...! : செங்கோட்டையனுக்கு தி.மு.க IT WING கண்டனம்!
-
“திமுக தயவில்தான் ஆட்சி நடக்கிறது.. நாம் தான் வழியனுப்பி வைத்தோம்” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்.. மான ஈனத்தைப் பற்றிக் கவலையில்லா காங்கிரஸ்!” : முரசொலி காட்டம்!