India
தொடர்ந்து சரியும் கச்சா எண்ணெய் விலை.. விலை குறைக்காமல் லிட்டருக்கு ரூ.10 லாபம் பார்க்கும் ஒன்றிய அரசு !
ரஷ்யா - உக்ரைன் போர் பிரச்னையை அடுத்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் ஏற்றம் கண்டுள்ளது. இதன் விளைவாக இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், ஓட்டல் மற்றும் டீ கடைகளில் உணவுப்பொருட்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளின் விலையை அதன் உரிமையாளர்கள் உயர்த்தும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
மேலும், போக்குவரத்துக்கு அதிகம் செலவு ஏற்பட்டதால் எல்லா துறையிலும் மறைமுக விலைவாசி உயர்வு தானாக அதிகரித்தது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் நேரடியாக பாதிக்கப்பட்டனர். ஆனால், மக்களை பற்றி கவலை படாமல் ன்றிய அரசு தனது கல்லாவை நிரப்புவதில் மட்டுமே குறியாக இருக்கிறது.
ஏற்கனவே, கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் பொருளாதார ரீதியில் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். தற்போதுதான் ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். இச்சூழ்நிலையில், காஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்கள் தலையில் மேலும் சுமையை ஏற்றியுள்ளது.
ஆனால், கடந்த 2 மாதமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை சரிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்குவதற்கு முன்பிருந்த விலையை விட குறைந்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஒன்றிய அரசு அந்த விலை குறைவை மக்களுக்கு கொடுக்காமல் தொடர்ந்து மக்களை வதைத்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல்,டீசல் விற்பனை விலையை குறைக்காமல் முந்தைய நிலையிலேயே தொடர்வதால் அந்நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலை ரூ.10 லாபத்தில் விற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வால் பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை கடந்த ஆண்டு சுமார் 6 மாதங்கள் இழப்பை சந்தித்த நிலையில், தற்போது பெரும் லாபத்தை ஈட்டி வருகின்றன. மேலும், அடுத்த தேர்தல் வரும்வரை பெட்ரோல்,டீசல் விலை குறைப்பு செய்ய எந்த வாய்ப்பும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் : ரூ.1000 கோடி நிதி - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்!
-
”நாட்டிலேயே சிறந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பீகார் தேர்தலில் தேஜஸ்வி புகழாரம்!
-
ராணிப்பேட்டை - 72,880 நபர்களுக்கு ரூ.296 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்க்க பழனிசாமி பயப்படுகிறார்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
35 மீனவர்கள் கைது : ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!