India
"உங்க மொழியில் எல்லாம் பேசமுடியாது,, இந்தியில்தான் பேசுவேன்" -கர்நாடகாவில் திமிராக பேசிய வங்கி ஊழியர் !
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.இது தவிர ஒன்றிய அரசின் அலுவலங்களில் இந்தியை பயன்படுத்த சொல்வது, அலுவல் பூர்வ கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
இரு தினங்களுக்கு முன்னர் பணியாளர் தேர்வாணையத்தால், ஒன்றிய அரசின் துறைசார் பணியிடங்களுக்கு நடத்தப்படும் CGL தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதற்கு திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதைத் தொடர்ந்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, மத்தியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
பாஜக அரசின் இந்த அறிவிப்புக்கு ஹிந்தி பேசாத தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமித்ஷா குழுவின் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். தமிழ்நாட்டை தாண்டி கேரளா, கர்நாடகா,ஆந்திரா,தெலுங்கானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் இந்தி திணிப்புக்கு கடும் எதிரப்பு எழுந்தது.
இந்த நிலையில், தற்போது கர்நாடகாவில் அமைந்துள்ள வங்கி ஒன்றின் ஊழியர் மாநில மொழியில் பேசமாட்டேன், இந்தியில்தான் பேசுவேன் என திமிராக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில் வங்கி ஊழியர் ஒருவர் "இந்தி மொழிதான் இந்தியாவில் வேலை செய்கிறது. பிறகு ஏன் நான் வேறு மொழியை பேசவேண்டும். கன்னட மொழியில் எல்லாம் பேச முடியாது" என திமிராக பேசியுள்ளார்.
இதற்கு அங்கு கூடியிருந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் தனது திமிரான பேச்சை அவர் குறைத்துக்கொள்ளவில்லை. வாடிக்கையாளர் ஒருவர் கன்னட மொழியில் ஏன் படிவங்கள் இல்லை என்று கேள்வியெழுப்பியதற்கு வாங்கி ஊழியர் இப்படி பதில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கி அதிகாரியின் இந்த திமிர் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
“இத்தகையவர் பாஜக சொல்லுக்குக் கட்டுப்பட்டவராகத் தானே இருப்பார்?” - தேர்தல் ஆணையரை வறுத்தெடுத்த முரசொலி!
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!