India
மனைவியை துண்டு துண்டாக வெட்டிய கணவன்.. உடல் பாகங்களை சாக்கு மூட்டையில் கட்டி ஆற்றில் வீசிய கொடூரம்!
மேற்குவங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டத்திற்குட்பட்ட சிலிகுரி கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது அன்சாருல். இவருக்குக் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்புதான் ரேணுகா காத்தூன் என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த 24ம் தேதியில் இருந்து ரேணுகா காத்தூனை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து போலிஸார் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கணவர் முகமது அன்சாருல் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு ரேணுகா அழகு நிலைய பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்று வந்துள்ளார். இதனால் அவர் சில ஆண்களுடன் பேசி வந்துள்ளார். இதைப்பார்த்த அவரது கணவர் முகமது அன்சாருல் மனைவி மீது சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால் தம்பதிக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24ம் தேதி மனைவியை மகாநத்தா நதி கால்வாய் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது மனைவியைக் கொடூரமாகத் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் அவரது உடலைப் பல துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி நதியில் வீசிய சத்தமே இல்லாமல் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். இதையடுத்து நதியில் இறங்கி போலிஸார் பல மணி நேரம் உடலை தேடி பார்த்ததில் சில உடல் துண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.ஆனால் ரேணுகா காத்தூன் தலை கிடைக்கவில்லை. இதனால் போலிஸார் இன்னும் நிதியில் தேடிவருகின்றனர்.
டெல்லியில் இளம் பெண் ஒருவர் 25 துண்டாக வெட்டப்பட்ட சம்பவத்தைப் போன்றே தொடர்ந்து இதேமாதிரி கொலைகள் நடந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!