India
'என்னையா வேலையை விட்டு தூக்கின'.. 6 மாதங்களுக்கு பின் manager-ஐ துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு!
உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் BPO அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் அனூப் சிங் என்பவர் வேலைபார்த்து வந்துள்ளார். இவர் சரியாக வேலைப் பார்க்காததால் இந்நிறுவனத்தில் மேலாளராக உள்ள ஷர்துல் இஸ்லாம் என்பவர் அனூப் சிங்கை வேலையில் இருந்து நீக்கியுள்ளார்.இந்த சம்பவம் நடந்து ஆறு மாதங்கள் ஆகியுள்ளது. இருப்பினும் அடிக்கடி அனுப் சிங் அலுவலகத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அனுப் சிங் அலுவலகம் வந்துள்ளார். அப்போது திடீரென மேலாளர் ஷர்துல் இஸ்லாமை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரின் தோள்பட்டையில் குண்டு பாய்ந்துள்ளது. இதைப்பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் ஷர்துல் இஸ்லாமை மீட்டு அருகே இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்க அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வேலையிலிருந்து நீக்கிய ஆத்திரத்திலேயே இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள அனூப் சிங்கை போலிஸார் தேடி வருகின்றனர்.
Also Read
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!