India
வீட்டின் முன் சிறுநீர் கழித்ததால் சண்டை.. 12 வயது சிறுவன் சுட்டுக் கொலை: ம.பி-யில் அதிர்ச்சி சம்பவம்!
மத்திய பிரதேச மாநிலம், பிந்து மாவட்டத்திற்குட்பட்ட கோட் கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் சிங். இவரது வீட்டின் முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த பிந்து சர்மா குடித்து விட்டு அடிக்கடி சிறுநீர் கழித்து வந்துள்ளார்.
இது குறித்து விகாஸ் சிங் அவரிடம் கண்டித்தும் மீண்டும் மீண்டும் அவர் வீட்டின் முன்பே சிறுநீர் கழித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாயன்று மீண்டும் பிந்து சர்மா வீட்டின் முன்பு சிறுநீர் கழித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இது தொடர்பாகக் காவல்நிலையத்தில் விகாஸ் சிங் புகார் அளித்துள்ளார். பின்னர் மாலையில் விகாஸ் சிங் வீட்டிற்கு வந்த பிந்து சர்மா திடீரென தான் எடுத்து வந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் வீட்டிற்குள் இருந்த கோலு வைஷ், விகாஸ் ரஜாவத், விஷ்ணு வைஷ் ஆகிய மூன்று பேர் மீது குண்டுபாய்ந்து காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 12 வயது சிறுவன் விஷ்ணு வைஷ் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்துப் பிந்து சர்மா அவரது கூட்டாளி மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட சண்டையில் சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!