India
அரசு பள்ளியை தொடர்ந்து ட்யூசன்.. ‘Parrot’ என்ற வார்த்தையை சரியாக கூறாத சிறுமி: கையை உடைத்த ம.பி ஆசிரியர்!
மத்திய பிரதேச மாநிலம், போபால் பகுதியில் அமைந்துள்ளது ஜந்தா காலனி. இங்கு இருக்கும் 22 வயது ப்ரயாக் விஸ்வகர்மா என்ற ஆசிரியர் ஒருவர் ட்யூசன் சென்டர் நடத்தி வருகிறார். இங்கு பல்வேறு மாணவர்கள் படிக்கும் நிலையில், அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரும் இங்கு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று அந்த சிறுமியை, ஆசிரியர் 'Parrot' என்ற வார்த்தையை கூறும்படி கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால் அந்த சிறுமியோ இதனை கூற சற்று திணறியுள்ளார். மேலும் அதனை சரிவர கூறவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர், அனைத்து மாணவர்கள் முன்பும் சிறுமியை ஓங்கி அறைந்துள்ளார்.
அதோடு சிறுமியின் கையை பிடித்து வளைத்து முறுக்கியுள்ளார். இதில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குள் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் குழந்தையை தாக்கியதற்காக வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக இதே போல், டெல்லியில் அரசுப்பள்ளி ஆசிரியை ஒருவர் சிறுமியை கத்தரிக்கோலால் தாக்கி மாடியில் இருந்து தூக்கி வீசிய சம்பவம் நாடு முழுவதும் அரங்கேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
’தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்’ : தமிழ்நாடு முழுவதும் செப்.20,21 தீர்மான ஏற்புக் கூட்டங்கள்!
-
யார் பொறுப்பேற்பது? : விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் சரமாரியாக கேள்வி!
-
முகத்தை மறைத்துக் கொண்டு வெளியேறுவது ஏன்? : பழனிசாமிக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“இதுக்கெல்லாம் துடிக்காத நெஞ்சம் முகமூடி வீடியோவை வெளியிட்டதால துடிக்குதோ” -அதிமுகவுக்கு குவியும் கண்டனம்
-
61 வயது மூதாட்டியிடம் 3 சவரன் தங்கநகை வழிப்பறி.. தவெக பிரமுகர் கைது.. விசாரணையில் ஷாக்!