India
ஓடும் பேருந்தில் மனைவியை வெட்டி கொலை செய்த போலிஸ் கான்ஸ்டபிள்.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்!
குஜராத் மாநிலம் சோட்டா உதய்வூர் பகுதியைச் சேர்ந்தவர் அம்ரித் ரத்வான். இவர் சூரத் மாவட்டத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி மங்குபென். இவரும் அரசு பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், மங்குபென் நேற்று பிகாபூர் கிராமத்தில் இருந்து பேருந்தில் ஏறி தனது நடத்துநர் பணியைக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பேருந்தில் ஏறிய அவரது கணவன் அம்ரித் ரத்வான் தான் எடுத்து வந்திருந்த கத்தியை எடுத்து மனைவியைச் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் ரத்த வெள்ளத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப்பார்த்த பொதுமக்கள் அலறியடித்துக் கதறினர். பின்னர் இதுபற்றி தகவல் அறிந்து போலிஸார் அங்கு வந்தனர்.
அப்போது மனைவியின் சடலம் அருகே ரத்தவெள்ளத்தில் இருந்த அம்ரித் ரத்வாவை போலிஸார் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் மங்குபென் உடலை மீட்ட போலிஸார் உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. ஓடும் பேருந்தில் மனைவியை கணவரே வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!