India
தமிழிசை என பெயர் வைத்து கொண்டு தமிழை அழிக்க நினைக்கும்ஆளுநர்.. முன்னாள் முதல்வர் நாராயணசாமி கடும் தாக்கு!
மாநில அந்தஸ்த்து விவகாரத்தில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெருவில் இறங்கிப் போராடினால் அவருடன் இணைந்து நாங்களும் போராடத் தயாராக இருக்கிறோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, "பிரதமர் மோடி நாட்டின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு விற்று வருகின்றார். சென்னை, பெங்களூர், திருச்சி உள்ளிட்ட 27 விமான நிலையங்களை தனியார் மயமாக்கப்பட உள்ளது. மோடி அரசின் கஜானா காலியாவதால் பொதுச் சொத்துக்களை விற்று ஆட்சி நடத்தலாம் என்று பார்க்கிறார்கள்.
அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காகப் புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சி.பி.எஸ்.சி படத்திட்டம் வந்தால் தமிழ் பாடம் இருக்காது. தமிழ் மொழியுடன் கூடிய சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தை அமல்படுத்தப்படும்.
தமிழிசை என பெயர் வைத்துக்கொண்டு தமிழை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன். புதுச்சேரியில் அதிகாரத்தைத் தமிழிசை சவுந்தரராஜன் கையில் எடுத்துக்கொண்டதால்தான் முதல்வர் ரங்கசாமி ஆதங்கப்படுகிறார்.
மாநில அந்தஸ்த்து விவகாரத்தில் முதல்வர் ரங்கசாமி தெருவில் இறங்கிப் போராடினால் நாங்களும் இணைந்து போராடத் தயாராகவே உள்ளோம். ஆளுநரை தட்டிக் கேட்கும் அதிகாரம் முதல்வர் ரங்கசாமிக்கு இல்லை. தமிழிசை சவுந்தரராஜன் புதுச்சேரி அரசுக்கு என்ன ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார் என்ற தகவலை பொது மக்கள் மத்தியில் சொல்ல வேண்டும். எத்தனை கோப்புகளுக்கு அவர் கையெழுத்திட்டார் என்பதை பகிரங்கமாக அவரால் பட்டியலிடமுடியுமா? " என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!