India
TV Remote பேட்டரியை விழுங்கிய 2 வயது சிறுவன்.. 20 நிமிடத்தில் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்கள்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 2 வயது சிறுவன் ரிஷிகேஷ் வீட்டிலிருந்த டிவி ரிமோட்டை வைத்து விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அதிலிருந்து பேட்டரியை எடுத்துத் தவறுதலாக விழுங்கியுள்ளான். இதில் மூச்சுவிட முடியாமல் அவதிப்பட்ட சிறுவனைக் கண்ட பெற்றோர்கள் பதறியடித்து மகனை உடனே அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு நடந்தவற்றை மருத்துவர்களிடம் கூறியுள்ளனர். உடனே மருத்துவர் குழு சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. பிறகு 20 நிமிடத்திலேயே எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் சிறுவன் வயிற்றிலிருந்து பேட்டரியை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர்.
தற்போது சிறுவன் நலமுடன் இருப்பதாகவும், பேட்டரி வயிற்றுப் பகுதியைத் தவிற வேறு இடத்தில் சிக்கி இருந்தால் சிறுவன் உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவன் விழுங்கிய பேட்டரியின் அளவு 5 செ.மீ நீளமும்,1.5 செ.மீ அகலமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டில் குழந்தைகள், சிறுவர்கள் கைகளில் ஆபத்தான பொருட்கள் அவர்களது கைகளில் கிடைக்காத வகையில் வைக்க வேண்டும் என பெற்றோர்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதையே இந்த சம்பவம் எடுத்துக் காட்டியுள்ளது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
புத்தகக் கண்காட்சிகள் எழுத்தாளர்களுக்கு மட்டுமானது அல்ல அனைவருக்கும் சொந்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“இதுதான் அமித்ஷாவின் வேலையா?”: ED ரெய்டுக்கு முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம்!
-
1.91 கோடி குடும்பங்களின் கனவை நனவாக்க... “உங்க கனவ சொல்லுங்க” திட்டம்! : நாளை (ஜன.9) முதல் தொடக்கம்!
-
Umagine TN 2026 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு : ரூ.9,820 கோடி முதலீடு - 4250 நபர்களுக்கு வேலைவாய்ப்பு!
-
“இளைய தலைமுறைக்கான தமிழ்நாட்டை கட்டி எழுப்பும் திராவிட மாடல்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!