India
MRP-யை விட அதிக விலைக்கு விற்பனை.. ரயில்வே விற்பனையாளர் கைது, 1 லட்சம் அபராதம்.. அதிரடி காட்டிய IRCTC !
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து சண்டீகருக்கு கடந்த 15ம் தேதி விரைவு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயிலில் ஷிவம் பாட் என்ற பயணி பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்பட்டதால் ரயிலில் விற்பனை செய்பவரிடம் தண்ணீர் பாட்டில் கேட்டுள்ளார்.
அதற்கு அவர் பாட்டில் விலை 20 ரூபாய் என்று கூறியநிலையில், MRP-யில் 15 ரூபாய் என்றே அச்சடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஷிவம் பாட் விற்பனையாளரிடம் கேட்டபோது 20 ரூபாய்க்குத்தான் விற்பனை என கூறி 20 ரூபாய் வசூல் செய்துள்ளார்.
உடனடியாக ஷிவம் பாட் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடந்த சம்பவத்தை பதிவிட்டு இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். அவரின் இந்த பதிவு ரயிலில் விற்பனையை நடத்திவரும் IRCTC நிறுவனத்தின் கவனத்துக்கு சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த IRCTC நிறுவனம் விற்பனை செய்த ஊழியரின் மேலாளரான ரவிக்குமார் என்பவரை ரயில்வே சட்டத்தின் கீழ் லக்னோவில் வைத்து கைது செய்துள்ளனர்.
இதுபோக அந்த பகுதியில் விற்பனையை ஒப்பந்தத்துக்கு எடுத்த உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சந்திர மவுலி மிஷ்ரா என்பவருக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயிலிவேயில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்ட்டுள்ளது.
Also Read
-
“74,168 விவசாயிகளுக்கு குறைந்தபட்ச மானிய விலை (MSP) நிதி வழங்காதது ஏன்?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!
-
“அரசியலமைப்புப்படி வழங்க வேண்டிய 27% இடஒதுக்கீடு எங்கே போனது? இதுதான் சமூக நீதியா?” : பி.வில்சன் எம்.பி!
-
தமிழ்நாடு விளையாட்டு மாநாடு 2.0 - 2025 தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
“பா.ஜ.க.வின் பழிவாங்கும் நோக்கம் அம்பலமாகியுள்ளது!”: ‘நேஷனல் ஹெரால்டு’ வழக்கு குறித்து முதலமைச்சர் பதிவு!
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?