India
மும்பை : செல்பியை வைத்து மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன்.. பிறந்தநாள் விழாவில் சோகம்!
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கார் என்னும் பகுதியில் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் தனது கல்லூரி தோழியான 17 வயது சிறுமியின் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்குவைத்து அந்த சிறுமிக்கு முத்தம் கொடுத்துள்ளார். அதோடு அதனை செல்பியாகவும் எடுத்துவைத்துள்ளார். பின்னர் சிறுமியை தொடர்பு கொண்ட அந்த சிறுவன் முத்தம் கொடுத்த புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி அந்த புகைப்படத்தை அழித்து விடுமாறு கெஞ்சியுள்ளார்.
ஆனால், அதனை ஏற்றுக்கொள்ளாத அந்த சிறுவன் அந்த புகைப்படத்தை காட்டி மிரட்டி அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு தொடர்ந்து அந்த சிறுமியை மிரட்டி வந்துள்ளார். இருவரும் ஒரே கல்லூரியில் படித்து வந்த நிலையில், தன்னோடு வருமாறு அந்த சிறுமியை அந்த சிறுவன் அழைத்துள்ளார்.
ஆனால், அதற்கு சிறுமி மறுத்த நிலையில் அவரை தாக்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் தங்கள் மகளிடம் கேட்ட போது மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தெரியவந்தது.
பின்னர் இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிஸார் கடந்த டிசம்பர் 9ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்த சிறுவனை கைது செய்து சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!
-
“ஈராயிரம் ஆண்டுகால சண்டை இது! இதில் நாம் தோல்வி அடைந்துவிட மாட்டோம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
நெல்லையில் 33 திட்டப்பணிகள் திறப்பு; 45,447 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி! : முழு விவரம் உள்ளே!
-
“உலகத் தமிழர் ஒவ்வொருவரும் கண்டுணர வேண்டிய பண்பாட்டுக் கருவூலம்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!