India
கடன்வாங்க சென்றவருக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. ஒரே நாளில் லட்சாதிபதியான தையல்காரர் !
உலகம் முழுவதும் லாட்டரி டிக்கெட் விற்பனை மூலம் சிலர் கோடீஸ்வரனாகி வருகின்றனர். அவர்கள் குறித்த செய்தி ஊடகங்களில் வெளியாகி பெரும் ஒரே நாளில் அவர்கள் பிரபலமானவர்களாகி விடுகின்றனர். இந்தியாவில் கேரளாவில் லாட்டரி சீட்டு விற்பனை பிரபலமாக இருந்து வருகிறது.
சில மாதங்களுக்கு முன்னர் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள மஞ்சேஷ்வர் பகுதியைச் சேர்ந்த முகமது பவா என்பவருக்கு 50 லட்சம் ரூபாய் அளவிற்கு கடன் இருந்ததால், வேறு வழியின்றி தனது சொந்த வீட்டை விற்க முடிவு செய்துள்ளார். அதன்படி வீட்டை விற்பதற்காக ரூ. 40 லட்சத்திற்கு பேசி முடித்துள்ளார்.
அதன்பின்னர் வீட்டை விற்பதற்காக முன்பணம் வாங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு அவருக்கு ரூ.1 கோடி லாட்டரி விழுந்து ஜாக்பாட் அடித்திருக்கிறது. இதனால் மிகவும் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்த முகமது தான் வீட்டை விற்கவிருந்த முடிவை மாற்றியுள்ளார்.
இந்த நிலையில், கேரளாவில் அதேபோன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மூர்க்கட்டில்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கனில் குமார். இவரும் இவர் மனைவியும் தையல் கடை வைத்து அதனை நடத்தி வருகின்றனர்.
இவர்கள் தங்கள் தையல் கடையை விரிவுபடுத்த திட்டமிட்டு கடன் வாங்க வங்கிக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு லாட்டரி டிக்கெட் முகவர் லாட்டரி வாங்கிக்கொள்ளுமாறு கேட்ட நிலையில், லாட்டரி டிக்கெட் ஒன்று வாங்கியுள்ளார்.
அதன்பின்னர் வங்கியில் கடன்கேட்டு பணியில் இருந்தபோது அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. லாட்டரியில் முதல் பரிசாக ரூ.80 லட்சத்தை அவர் வாங்கிய லாட்டரி சீட்டு பெற்றுள்ளதை வங்கி முகவர் போன் செய்து கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
ஒரே ஆண்டில் 17,702 பேருக்கு அரசு வேலை : சாதனை படைத்த TNPSC!
-
”பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் புகழ் தமிழுள்ள வரை போற்றப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி!
-
GST வரி செலுத்துவோரின் சுமை எப்படி குறையும்? இதில் என்ன பெருமை இருக்கிறது?: மோடி அரசுக்கு முரசொலி கேள்வி!
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!