India
ஈவ் டீசிங் செய்வதை தட்டி கேட்ட கேரள மாணவிக்கு அடி உதை.. முடிவெட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் !
கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் CMS என்ற தனியார் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கோட்டயம் சென்ட்ரல் சந்திப்பு அருகே உணவு வாங்கினார். திரும்பி வருகையில் அவரது நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது அங்கே நின்று கொண்டிருந்த சில மாணவிகளை 3 பேர் கொண்ட கும்பல் ஈவ் டீசிங் செய்துள்ளனர். அப்போது இதனை கண்ட சக அவர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, அந்த கும்பல் இந்த மாணவர் மற்றும் மாணவியை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பட்டது. அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் பிரச்னையில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்தனர். மேலும் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த மாணவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த நிகழ்விற்கு கண்டனம் தெரிவித்து cms கல்லூரி மாணவிகள் நூதன போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். அதன்படி அங்கு படிக்கும் சில மாணவிகள் தங்களது முடிகளை வெட்டி போராட்டம் நடத்தினர். இது தொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!