India
உ.பி: சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை.. சிறுவனின் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்ட கொடூர ஆசிரியர்!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரேம் நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வரும் அனுஜ் என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துள்ளார்.
அப்போது அங்கிருந்த சிறுவர் ஒருவரிடம் 2-ம் வாய்ப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவரோ சரிவர பதிலளிக்காததால் ஆசிரியர் தண்டனை கொடுக்க விளைந்துள்ளார். அதன்படி அருகே இருந்த ஒரு டிரில்லிங் மிஷினை எடுத்து சிறுவனின் கையில் துளை போட்டுள்ளார். இதில் காயமடைந்த சிறுவன், வீட்டில் இதைப்பற்றி கூறி அழுதுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ந்த பெற்றோர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்ததோடு பள்ளி வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் இது பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளிடமும் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டானர். தற்போது ஆசிரியர் காவல்துறை கஸ்டடியில் வைக்கப்பட்டுள்ளார். சரியாக வாய்ப்பாடு சொல்லவில்லை என்பதற்காக 5-ம் வகுப்பு மாணவர் ஒருவர் கையில் டிரில்லிங் மிஷின் மூலம் துளை போட்டுள்ள கொடூர ஆசிரியரின் செயல் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"நாக்பூர் குருபீட அடிமைச் சேவகர் பழனிசாமி இது பற்றி பேசலாமா?- CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம்!
-
”அறியாமை இருளில் மூழ்கியுள்ளார் பழனிசாமி” : அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!