India
வயிற்றில் பஞ்சு வைத்து தைத்த மருத்துவர்கள்.. 3 முறை அறுவை சிகிச்சை: பெண்ணுக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடு!
கர்நாடக மாநிலம், பெங்களூரு அடுத்த உடுப்பி பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 2018ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெற்றெடுத்துள்ளார்.
இதையடுத்து அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களை நேரில் சந்தித்து இது குறித்துக் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் அறுவை சிகிச்சைக்கு பிறக அப்படிதான் வயிறு வலி இருக்கும் என கூறியுள்ளனர்.
இதனால் அவர் முதலில் சரி என்று வலியைத் தாங்கிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் வலி அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது. பிறகு மற்றொரு மருத்துவரைச் சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு இரண்டாது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்த பெண்ணுக்கு மார்பு பகுதியில் வலி எடுத்துள்ளது. இதனால் பிறந்த குழந்தைக்குப் பால் கொடுக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். பின்னர் அவரது கணவர் பெங்களூரில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு MRI ஸ்கேன் எடுத்து பார்த்தபோதுதான் அந்த பெண்ணின் வயிற்றுப் பகுதியில் பஞ்சு ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரசவத்திற்கான அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் தவறுதலாகப் பஞ்சை வைத்துத் தைத்தது தெரியவந்தது. இதையடுத்து மூன்றாவது முறையாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றிலிருந்த பஞ்சு அகற்றப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவரின் வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவமனை ரூ.20 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
”விடுபட்டவர்களுக்கும் ரூ.1,000 கிடைக்கும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
-
தமிழ்நாடு ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக, ‘உலக புத்தொழில் மாநாடு 2025’! : எங்கு? எப்போது?
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!