India
எல்லாம் அவளுக்காக.. ShowRoom-ல் இருந்து சொகுசுகாரை நூதனமாக திருடி சென்ற காதலன்.. இறுதியில் நேர்ந்த சோகம்!
காதலியை கவர சொகுசு காரை திருடி சென்ற இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளது மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சொகுசு கார் ஷோரூமின் ஊழியர் நதீம் ஷேக் என்பவர், ஒரு காரை விற்பனை செய்யவுள்ளதாக தனது வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். இதனை கண்ட விமான் நகர் பகுதியை சேர்ந்த இஷாந்த் ஷர்மா என்பவர் நதீம் ஷேக்கை நவம்பர் 19-ம் தேதி தொடர்பு கொண்டு தான் கார் வாங்க விருப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.
இதை நம்பிய அவரும், மறுநாள் இஷாந்தை ஷோரூமுக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது சுமார் 2.80 லட்சம் மதிப்பிலான காரை காட்டி தான் வாங்கபோவதாக கூறினார். ஆனால் தனது அம்மாவின் பிறந்தநாளுக்கு இதனை பரிசாக அளிக்க விரும்புகிறேன்; எனவே அவருக்கு பிடித்தது போல் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
பின்னர் தனது அம்மா மற்றும் காதலியிடம் இதை காட்டி விட்டு வருவதாக கூறி கடனாக கேட்டுள்ளார். எனவே ஷர்மாவுடன், ஷேக்கின் சகோதரரும் சென்றுள்ளார். அப்போது சாவித்ரிபாய் ஃபுலே புனே பல்கலைக்கழகத்தின் (SPPU) நுழைவாசலுக்கு வந்த அவர்கல், தன்னுடன் காரில் இருப்பவரிடம் உங்களை உள்ளே அனுமதிக்கமாட்டாரகள் என கூறி இறங்க கூறியுள்ளார்.
இவரும் இறங்கியபின், அந்த நபர் அங்கிருந்து காரை எடுத்துக்கொண்டு தப்பியுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் ஷேக் புகார் அளித்திருக்கிறார். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ஷர்மாவை கைது செய்தனர்.
அப்போது அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அம்மாவுக்கு பிறந்தநாள் என்று தான் பொய் கூறியதாகவும், தனது காதலியை கவரவே தான், காரை எடுத்து சென்றதாகவும் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“தேன்மொழி சௌந்தரராஜனின் சமூகப்பணி தொடரட்டும்!” : வைக்கம் விருது அறிவிப்பையடுத்து கனிமொழி எம்.பி வாழ்த்து!
-
பொய்யை விதைத்து விவசாயிகளின் வாக்குகளை அறுவடை செய்ய பார்க்கும் பழனிசாமி: துணை முதலமைச்சர் உதயநிதி பதிலடி!
-
சுற்றுலாத்துறையில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு : 13 பிரிவில் சுற்றுலா விருதுகள்!
-
“அடையாற்றை சீர்படுத்துவதற்காக ரூ.1,500 கோடியில் திட்டம்!” : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
வாக்கு திருட்டு : ஒரு போலி விண்ணப்பத்திற்கு ரூ.80 - சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில் அம்பலம்!