India
581 கிலோ கஞ்சாவை எலி தின்னுடுச்சு: “உருட்டா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா?” -உபி போலிஸ் சொன்ன விளக்கம்
பறிமுதல் செய்து வைத்திருந்த 581 கிலோ கஞ்சாக்களை எலிகள் திண்றுவிட்டதாக உத்தரபிரதேச பிரதேச போலிஸார் அளித்த வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நாடு முழுவதும் கஞ்சா விற்பனை மறைமுகமாக நடைபெற்று வருவதால், அனைத்து இடங்களிலும் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தர பிரதேச மாநிலம் மதுரா காவல் நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 700 கிலோ கஞ்சாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதிலும் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நெடுஞ்சாலையில் நடத்திய கஞ்சா வேட்டையில் மதுரா காவல்துறையினர் சுமார் 581 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் இதனை கடத்தி வந்த கடத்தல்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு தற்போது வரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது இதன் விசாரணை நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் குற்றவாளிகள் கடத்தி வந்த கஞ்சாவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் மதுரா காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஏனெனில் அப்போது தான் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியும்.
நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து, காவல்துறையினர் கஞ்சாவின் சில மாதிரிகளை (Samples) மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். ஆனால் இதனை ஏற்காத நீதிமன்றம், குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த கஞ்சாவையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கறாராக கூறியது. நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மதுரா காவல்துறை தரப்பில் இருந்து விநோதனமான பதில் வந்துள்ளது. இதனை கேட்ட நீதிமன்றம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
அதாவது, காவல் நிலைய ஸ்டோர் ரூமில் எலி தொல்லை அதிகமாக இருப்பதாகவும், அந்த எலிகள் தான் பறிமுதல் செய்யப்பட்ட 581 கிலோ கஞ்சாவையும் தின்றுவிட்டதாகவும், எனவே தான், பறிமுதல் செய்யப்பட்ட ஒட்டுமொத்த கஞ்சாக்களையும் சமர்ப்பிக்க முடியவில்லை என விளக்கமளித்தது. மதுரா காவல்துறையின் விநோத விளக்கத்தை கேட்ட நீதிமன்றம் ஆடிப்போய் விட்டது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!