India
காளான் சமைத்துச் சாப்பிட்ட தந்தை,மகன் உயிரிழப்பு.. அதிர்ச்சியடைந்த உறவினர்கள்: கர்நாடகாவில் சோகம்!
கர்நாடக மாநிலம், தட்சினகன்னடா மாவட்டத்திற்குட்பட்ட புதுவெட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் 80 வயது முதியவர் குருவா மேரா. இவரது மகன் ஒடியப்பா. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் அருகே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
அப்போது, காட்டில் விளைந்திருந்த காளான்களை பறிந்து வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். பிறகு அந்த காளான்களை சமைத்துச் சாப்பிட்டுள்ளனர். பிறகு நேற்று வெளியே சென்றிருந்த குருவா மேராவின் மற்றொரு மகன் வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது தந்தை மற்றும் சகோதரன் சடலமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு அங்கு வந்து போலிஸார் விசாரணை செய்தனர். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பாத்திரத்தில் காளான் சமைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதோடு காட்டிற்குச் சென்று காளான் பறிந்து வந்ததும் விசாரணையில் தெரிந்தது.
இதனால் காளான் சமைத்து சாப்பிட்டதால் உயிரிழந்தார்களா அல்லது உணவில் யாராவது விஷம் கலந்துள்ளார்களா? என போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்தபிறகே உண்மை என்ன வென்று தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். காளான் சமைத்துச் சாப்பிட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!