India
மரத்தின் மீது வேகமாக மோதி நொறுங்கிய கார்.. 25 வயதில் உயிரிழந்த Instagram பிரபலம்!
கிரேட்டர் நொய்டாவின் சி செக்டர் பகுதியில் வசித்து வருபவர் ரோஹித் பாட்டீ. இவர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிரம் போன்ற சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டுப் பிரபலமானவர். 25 வயதான இவரது சமூகவலைதளப் பக்கத்தை ஆயிரக்கணக்கானோர் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், தனது இரண்டு நண்பர்களுடன் ரோஹித் பாட்டீ காரில் சென்றுள்ளார். காரை ரோஹித் பாட்டீ ஓட்டியுள்ளார். கார் வேகமாக சுகாத்பூர் சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் திருப்பத்தைக் கவனிக்காமல் கார் வேகமாக எதிரே இருந்த மரத்தின் மீது மோதியுள்ளது. இதில் காரின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் ரோஹித் பாட்டீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் ரோஹித் பாட்டீ உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் படுகாயத்துடன் இருந்த நண்பர்கள் மனோஜ், அதிஷ் ஆகியோரை மீட்ட போலிஸார் இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலை விபத்தில் ரோஹித்தின் மரணச் செய்தியைக் கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவரது நண்பர்கள் ரோஹித் பாட்டீயின் இறுதி நிகழ்ச்சியை ரீல்ஸ் வீடியோவாக வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
6 நாட்களில் 1,500 டன் கழிவுகள்... தமிழ்நாடு முழுவதும் SIPCOT தொழிற்பூங்காக்களிலில் மாபெரும் தூய்மைப் பணி!
-
கோலகலமாக நடைபெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு... முதல் 3 பரிசுகளை வென்றது யார்? என்ன? - விவரம் உள்ளே!
-
5-வது இடத்தில் இறங்கி ஆடிய KL ராகுல்… கொண்டாடிய ரசிகர்கள்... காரணம் என்ன?
-
‘டால்பின்’ அன்புமணி.. வெளியேற தயாரா?.. - அன்புமணியை அறிக்கை மூலம் விளாசிய அமைச்சர் MRK பன்னீர்செல்வம்!
-
வடகிழக்குப் பருவமழை, புயல்... விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணத்தொகை.. அரசாணை வெளியீடு!