India
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பிரபல 5 Star Hotel உரிமையாளர்.. டெல்லியில் அதிர்வலை !
டெல்லியில் உள்ள பிரபல 5 Star Hotel உரிமையாளர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள காசியாபாத்தில் கவுஷாம்பி என்ற பகுதியில் அமைந்துள்ளது ராடிசன் ப்ளூ ஹோட்டல். 5 ஸ்டார் ஹோட்டலாக திகழும் இது, அந்த பகுதியில் பிரபலமான ஹோட்டலாக விளங்குகிறது. இதன் உரிமையாளர் அமித் ஜெயின் என்பவர் ஆவார். அமித்திருக்கு நொய்டா பகுதியில் சொந்தமாக வீடு ஒன்று உள்ளது.
இந்த நிலையில் சம்பவத்தன்று கிழக்கு டெல்லியில் வசிக்கும் அமித், வீட்டிலுள்ள மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்ட வீட்டில் வேலை செய்யும் நபர்கள் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் தொங்கிய நிலையில் இருந்த அமித்தை கீழே இறக்கினர்.
பின்னர் அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் வீட்டை முழுவதும் சல்லடை போட்டு தேடினர். ஆனால் தற்கொலைக்கான கடிதமோ, ஆதாரமோ எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து அக்கம்பக்கத்தில் விடாமல் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து இது குறித்து காவல்துறை தரப்பில் கூறுகையில், "தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட அமீத்தின் உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பியுள்ளோம். அமித் தற்கொலை செய்துகொண்டாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அவர் இறப்பதற்கு முன்பு, நொய்டாவில் அமைந்துள்ள அவரது மற்றொரு இல்லத்திற்கு சென்று காலை உணவை உண்டுள்ளார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கிழக்கு டெல்லிக்கு வந்துள்ளார். இங்கு அவரது அறையில் தூக்கில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்போது உண்மையில் அவர் தற்கொலை தான் செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும் அவருக்கு கடன் தொல்லை ஏதேனும் இருந்ததா அல்லது அவரை யாரும் மிரட்டினாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. பிரபல 5 ஸ்டார் ஹோட்டல் உரிமையாளர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தந்தை பெரியார் பிறந்தநாள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்பு !
-
எதிர்தரப்பு வாதங்களை கேட்காமலே அதானிக்கு ஆதரவாக வெளியான தீர்ப்பு... அதிர்ச்சி அளித்த நீதிபதிகள் !
-
“பச்சை, மஞ்சள் கலர் பஸ்ல யாரு வந்தாலும், கடைசியா பிங்க் கலர் பஸ்தான் ஜெயிக்கும்” - துணை முதலமைச்சர் கலகல!
-
என்றென்றும் ஒலிக்கும் குரல்... அன்றும்.. இன்றும்... என்றும் பெரியார்! - #HBDPeriyar147 !
-
‘அன்புக்கரங்கள்' திட்டம் : கருணையின் முதல்வராகக் காட்சி தருகிறார் மு.க.ஸ்டாலின்... முரசொலி புகழாரம் !