India
ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்த மகன்.. காட்டிக் கொடுத்த CCTV : ம.பி-யில் பகீர்!
மத்திய பிரதேச மாநிலம், பர்வானின் மாவட்டத்திற்குட்பட்ட சேந்த்வா பகுதியைச் சேர்ந்தவர் சகன் பவார். இவர் கடந்த 10ம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். இது குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் விபத்து நடந்த பகுதியிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அவரை மர்ம நபர்கள் திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரது மகன் அனில் பவாரிடம் போலிஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் முன்னுக்கு பின்முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் மேலும் சந்தேகம் அடைந்த போலிஸார் தீவிரமாக விசாரணை செய்ததில் தந்தையின் இன்சூரன்ஸ் பணத்திற்காக நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த விசாரணையில், சகன் பவாருக்கும் அவரது மகன் அனில் பவாருக்கும் இடையே குடும்ப பிரச்சனை மற்றும் பணம் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்தான் தந்தையின் ரூ.10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற நண்பர்களுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியுள்ளார்.
இதன்படி பெற்ற தந்தை என்றும் பார்க்காமல் அவரை கொலை செய்துள்ளார். இதையடுத்து அனில் பவார் மற்றும் அவரது நண்பர்கள் பின்டு, கோலு, கரன் ஆகிய 4 பேரையும் போலிஸார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். ரூ. 10 லட்சம் இன்சூரன்ஸ் பணத்திற்காகப் பெற்ற தந்தையை மகன் கொலை செய்த சம்பவம் உறவினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?
-
VBGRAMG சட்டம் ஒழிக! : ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்த மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!