India
காசு இல்ல.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை: பீகாரை உலுக்கிய சம்பவம்!
பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்திற்குட்பட்ட நியூ ஏரியா பகுதியைச் சேர்ந்தவர் கேதர் லால் குப்தா. பழ வியாபாரியான அவரது மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, சாஷி குமாரி. மகன் பிரின்ஸ் குமார் உள்ளனர்.
இந்நிலையில் பழ வியாபாரம் நன்றாகச் செல்லாததால் குடும்பத்தில் பணக் கஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேதர் லால் குப்தா மணீஷ் குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் இந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் மணீஷ் குமார், மூன்று நான்குபேருடன் குப்தா வீட்டிற்கு வந்து கடன் பணத்தைக் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது எல்லாம் ரூ.1000 கொடுத்து சமாதானம் படுத்தியுள்ளார். ஆனால் முழு பணத்தையும் கொடுக்க வேண்டும் என மணீஷ் குமார் மிரட்டிக் கூறியுள்ளார்.
பிறகு ஒட்டுமொத்த குடும்பம் மன உளைச்சலில் இருந்துள்ளது. மேலும் பழ வியாபாரத்தையும் சரியாக நடத்த முடியாததால் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுள்ளனர். இதையடுத்து குடும்பத்தில் உள்ள அனைவரும் முடிவெடுத்து விஷம் குடித்துள்ளனர்.
இதில் கேதர் லால் குப்தா. மனைவி அனிதா தேவி. இவரது மகள்கள் குரியா குமாரி, சப்னம் குமாரி, மகன் பிரின்ஸ் குமார் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மற்றொரு மகள் சாஷி குமாரி மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
அடுத்த 7 நாட்களுக்கான வானிலை நிலவரம் : எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?
-
“சுயமரியாதை கொள்கையில் முதலீடு செய்துவிட்டு வந்திருக்கிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
குட் பேட் அக்லி - இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த தடை : உயர்நீதிமன்ற உத்தரவு!