India
3 ஆண்டுகளாக அச்சடிக்கப்படாத 2000 ரூபாய் நோட்டு.. மோடியின் பணமதிப்பிழப்பு திட்டத்தின் அடுத்த தோல்வி !
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி, இரவு 8 மணியை இந்தியர்கள் யாரும் வாழ்நாளில் மறக்க முடியாது. அன்றுதான் கள்ள நோட்டை ஒழிக்கப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பின்னர், புதிய 500, 2000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தியபோது ரொக்கப்பணத்தை ஒழித்து டிஜிட்டல் பணத்துக்கு மாறுவோம். கருப்பு பணத்தை ஒழிப்போம் என பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி கருத்து தெரிவித்தார்.
ஆனால், அதன்பின்னர் வந்த ஆண்டுகளில் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தையே சீரழித்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமல்படுத்தப்பட சில மாதங்கள் போதிய மாற்று ஏற்பாடுகள் செய்யாததால் ரொக்க பணம் கிடைக்காமல் மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட நிலையில் அதன்பின்னர் பொருளாதார பிரச்சனையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து பழைய 500,1000 ரூபாய்களுக்கு பதிலாக புதிய 500,2000 ரூபாய் தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் 2000 ரூபாய் தாள் பெரிதாக மக்களுக்கு எந்த வகையிலும் உபயோகப்படவில்லை. அதிலும் குறிப்பாக சில்லரை மாற்ற பெரும் சிரமத்தை சந்தித்ததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதனை பயன்படுத்துவதை தவிர்க்கத் தொடங்கினர்.
இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவே படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2017, 2018 ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டதாகவும் பின்னர் 2019 ஆம் ஆண்டில் 46.690 மில்லியன் 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் அதன்பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 2000 ரூபாய் நோட்டுகளே அச்சிடப்படவில்லை என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில் தற்போது 2000 ரூபாய் நோட்டு அறிமுகமும் தவறான நடவடிக்கையாக மாறியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!