India
தலைமுடி கொட்டியாதல் விரக்தி.. உருக்கமாக கடிதம் எழுதி விபரீத முடிவெடுத்த இளைஞர்!
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு முடிகொட்டும் பிரச்சனை இருந்துள்ளது. இதனால் அவர் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து தலையில் இருந்து முடி கொட்டுவதை நிறுத்துவதற்காக சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
மேலும் மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகள் அனைத்தையும் தவறாமல் சாப்பிட்டு வந்துள்ளார். ஆனால் கடந்த 6 ஆண்டுகள் ஆகியும் அவருக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து தீர்வு கிடைக்கவில்லை.
இதனால் விரக்தியடைந்த பிரசாந்த் சம்பவத்தன்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது பற்றி தகவல் அறிந்து வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலும் தற்கொலைக்கு முன்பு பிரசாந்த் எழுதிய கடிதம் ஒன்றையும் போலிஸார் கைபற்றியுள்ளனர். அதில், தனக்கு சிகிச்சை அளித்த ரஃபீக் தவறான மருந்துகளை பரிந்துரைத்துள்ளார். இதுதான தனது நிலைக்கு காரணம் என இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போலிஸார் மருத்துவர் ரஃபிக்கிடம் விசாரணை செய்ததில், 'பிரசாந்த் ஒரு வித்தியாசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்கான மருந்தைதான் நான் பரிந்துரைத்தேன்' என தெரிவித்துள்ளனர். இருப்பினும் போலிஸார் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
காசா, லெபனான், ஈரானைத் தொடர்ந்து சிரியா : ராணுவ தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்... காரணம் என்ன ?
-
திருவள்ளுவர் சொல்லாத குறளை சொன்ன விவகாரம்... ஆளுநர் ரவி செய்தது திட்டமிடப்பட்ட சதி : செல்வப்பெருந்தகை !
-
1 மணி நேரம் வராத புறநகர் மின்சார ரயில்... ரயிலை மறித்து பயணிகள் போராட்டம் : சென்னையில் நடந்தது என்ன ?
-
மயிலாடுதுறை மக்களே.. உங்களுக்காக 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“பத்து தோல்வி பழனிசாமிக்கு வரும் தேர்தல் நிறைவான Goodbye!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!