India
மோர்பி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் அருகே குட்கா, சிகரெட் : இதுவும் குஜராத் மாடலின் ஒரு அம்சமா ?
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாலம் 100 ஆண்டுகளுக்குப் பழமையானது. இந்த பாலம் பழுதடைந்ததால் சில மாதங்களுக்கு முன்பு மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் குஜராத் மாநிலத்தின் புத்தாண்டு தினமான கடந்த 26ம் தேதி திறக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு இந்த பாலத்தில் குழந்தைகள், பெரியவர்கள் என குடும்பத்துடன் 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பாலத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென பாலம் இரண்டாக அறுந்து ஆற்றில் விழுந்துள்ளது. இதில்141 பேர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த துயர விபத்திற்கு எதிர்க்கட்சிகள் பலரும் ஆளும் பா.ஜ.க அரசைக் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். குறிப்பாகக் குஜராத் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. அதற்கு முன்னதாக இந்த பாலத்தை திறக்க வேண்டும் என்பதற்காக அவசர அவசரமாகத் திறத்தால் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும் இதுதான் குஜராத் மாடலின் லட்சணம் எனவும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் மோர்பியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி சிகிச்சை பெற்று வருபவர்களை முக்கிய ஊடகமான ani நேரில் சந்தித்து பேட்டி எடுத்தது.
அப்போது அவர்களை வைத்திருந்த அறையில் குட்கா தாள்கள்,சிகரெட் இருந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் குறிப்பிட்டு பலரும் மோடியின் குஜராத் மாடலை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே சுகாதார குறியீடுகளில் குஜராத் பின்தங்கி இருக்கும் நிலையில், அதனை பொதுஅரங்கில் வெளிக்காட்டும் விதமாக இப்படி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!