India
காதலனுக்கு ஜூஸ் கொடுத்த வழக்கில் திடீர் திருப்பம்: காதலியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சியடைந்த போலிஸ்!
கேரள மாநிலத்திற்கு உட்பட்ட பாறசாலை பகுதி தமிழ்நாட்டில் எல்லையில் உள்ளது. இந்த ஊரைச் சேர்ந்தவர் ஷாரோன் ராஜ். கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்த இவருக்கு சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இதையடுத்து தனது மகன் இறப்பிற்கு அவரை காதலித்து வந்த பெண்தான் காரணம் என கூறி ஷாரோன் ராஜின் பெற்றோர்கள் பாறசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து போலிஸார் காதலி கிரீஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்துள்ளது.
கிரீஷ்மாவின் பெற்றோர்கள் அவருக்கு ஜாதகம் பார்த்துள்ளனர். அப்போது அவரது ஜாதகத்தைப் பார்த்த ஜோதிடர் ஒருவர், 'பெண்ணின் முதல் கணவன் உயிரிழந்து விடுவார். இரண்டாவது கணவருடன் மட்டும் தான் அவரால் வாழ முடியும்' என கூறியுள்ளார். இதை கிரீஷ்மாவும் அவரது குடும்பத்தினரும் நம்பியுள்ளனர்.
மேலும் கிரிஷ்மா இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஜோதிடர் கூறியதை அடுத்த தனது காதலன் உயிரைக் காப்பாற்ற குடும்பத்துடன் சேர்ந்து திட்டம் போட்டுள்ளார். இதன் படி ஷாரோன் ராஜினை காதலித்துள்ளார். அவரும் இது எல்லாம் ஒரு நாடகம் என்று தெரியாமல் அவரை உண்மையாகக் காதலித்துள்ளார்.
இதையடுத்து ஷாரோன் விட்டை விட்டு வெளியேறி கிரீஷ்மாவை திருமணம் செய்துள்ளார். பிறகு அவர் தனது வீட்டிற்கு கிரீஷ்மா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு முதலில் கஷாயம் கொடுத்துள்ளார். பின்னர் அவருக்கு தெரியாமல் விஷம் கலந்த ஜூஸ் குடிக்கக் கொடுத்துள்ளார். இதைக் குடித்த பிறகு ஷாரோன் வாந்தி எடுத்துள்ளார். மேலும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்துள்ளன. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் கிரீஷ்மா மற்றும் அவரது பெற்றோர்களிடம் போலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைதான கிரீஷ்மா காவல்நிலையத்தில் கழிவறையிலிருந்த கிருமி நாசி குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து அவரை மீட்டு போலிஸார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காதலி தனது காதலனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!