India
இளம்பெண்ணை கட்டிப்போட்டு கூட்டு பாலியல் வன்கொடுமை:4 பேர் கொண்ட கும்பல் வெறி செயல் -சத்தீஸ்கரில் அதிர்ச்சி
சுகாதார மையத்திற்குள் புகுந்து பெண் செவிலியரை தாக்கி கட்டிப்போட்டு கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் சத்தீஸ்கரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகேந்திரகர் பகுதியை அடுத்துள்ள சிப்சிபி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இளம்பெண் ஒருவர். இவர் அந்த பகுதியிலுள்ள சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த நிலையத்தில் தனியாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் இவர் தனியே வேலை செய்வதை நோட்டமிட்ட கும்பல் திடீரென அந்த சுகாதார நிலையத்தினுள் நுழைந்து பெண்ணை தாக்கி கட்டிப்போட்டு கூட்டுப்பாலியால் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை தங்களது மொபைல் போனில் வீடியோவும் எடுத்துள்ளனர். அதோடு இதனை வெளியே சொன்னால், கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து வீட்டிற்கு சென்ற அந்த பெண் நடந்தவற்றை தனது குடும்பத்தாரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் இது குறித்து காவல்துறையில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்டவர்கள் 3 பேரை கைது செய்துள்ள நிலையில், 4வதாக ஒரு நபர் மட்டும் தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தலைமை சுகாதார அலுவலர் பிரதிமா சிங் கூறுகையில், "எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாங்கள் வேலை செய்ய மாட்டோம்" என்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!