India
ஹோட்டல்களில் தங்குபவர்களுக்கு நேர்ந்த அதிர்ச்சி.. நூதன முறையில் வீடியோ எடுத்து மிரட்டிய கும்பல் கைது !
வெளிஊர்களுக்கு சுற்றுலா, அல்லது தேனிலவு செய்யும் தம்பதிகள் அங்குள்ள ஓட்டல்களில் தங்குவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது தவிர குடும்பத்தோடு செல்பவர்களும் ஓட்டல்களில் தங்கி வருகின்றனர். அப்படி தங்குபவர்களை அந்தரங்கமாக வீடியோ எடுத்து மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. அதேபோன்ற சம்பவம் மீண்டும் நடைபெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் ஓயோ நிறுவனத்தின் ஹோட்டல் ஒன்று அமைந்துள்ளது. அங்கு ஒரு தம்பதியினர் அறை எடுத்து தங்கியுள்ளனர். அப்போது அவர்கள் தனிமையில் இருந்ததை ரகசியமாக அங்கு இருந்த கேமரா மூலம் ஒரு கும்பல் வீடியோ எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த தம்பதியை தொடர்புகொண்ட அந்த கும்பல் இந்த வீடீயோவை காட்டி அதை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த தம்பதியினர் இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலிஸார் 4 பேரை கைது கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில், வாடிக்கையாளர் போல ஒரு ஹோட்டலில் அறை எடுத்துதங்கும் இவர்கள் அங்கு ரகசிய காமெராவை வைப்பதும், பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் அதே அறையை வாடகைக்கு எடுத்து அந்த ரகசிய காமெராவில் இருந்த வீடியோவை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாடிக்கையாளர்களை மிரட்டி வந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பஞ்சாப் மழை வெள்ளம்! : 3.87 லட்சம் பேர் பாதிப்பு - உயிரிழப்பு 51ஆக உயர்வு!
-
”பா.ஜ.கவின் பொருளாதாரச் சிந்தனை புல்லரிக்க வைக்கிறது” : வெளுத்து வாங்கிய முரசொலி!
-
தமிழ்நாட்டில் ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பை : போட்டி அட்டவணையை வெளியிட்ட துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!