India

"சிறுமியை வன்கொடுமை செய்தாலும் அவரை கொலை செய்யாத கருணை கொண்டவர்"- குற்றவாளிக்கு சலுகை காட்டிய நீதிமன்றம்!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 4 வயது சிறுமியை கூலி தொழிலாளி ராம்சிங் என்பவர் மிட்டாய் வாங்கி தருவதாக ஆசை காட்டி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவத்தின் கீழ் புகார் அளிக்கப்பட்ட நிலையில், ராம்சிங் கைது செய்யப்பட்டார்.

சிறுமிக்கு நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை சோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியது உறுதிசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ராம்சிங்க்கு இந்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டது.

தற்போது 15 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ராம்சிங் தன்னுடைய தண்டனை காலத்தை குறைக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் சுபோத் அபியங்கர் மற்றும் சத்யேந்திர குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது.

விசாரணையில், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்து 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைப்பதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் உத்தரவில் கூறியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தங்கள் தீர்ப்பில் 4 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த குற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என்றாலும் குழந்தையை கொல்லாமல் உயிருடன் விடும் அளவுக்கு அவர் கருணை கொண்டவராக இருப்பதால் தண்டனை காலத்தை குறைக்கிறோம் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கேரளா :OTT படத்தில் வாய்ப்பு என ஆபாச படத்தில் நடிக்க வைத்த கும்பல்.. இளம்நடிகர், நடிகை பரபரப்பு புகார்!