India
கம்பளி விற்பதுபோல் கைவரிசை.. பெண்ணிடம் செயின் பறித்துவிட்டு தப்பியபோது விபத்தில் சிக்கிய கொள்ளையர்கள்!
கர்நாடக மாநிலம், தட்சினகன்டா மாவட்டம் தோள்பாடி கிராமத்தில், பொளலி அத்தூர் பகுதியைச் சேர்ந்த ரமிசுதீன், ரபீக் ஆகிய இருவர் காரில் கம்பளி விற்பனை செய்துள்ளனர். அப்போது, பெண் ஒருவர் இவர்களிடம் கம்பளி வாங்க வீட்டிலிருந்து வெளியே வந்துள்ளார். மேலும் அவர் காரில் இருந்த கம்பளிகளை சோதனை செய்து கொண்டிருந்தார்.
அந்த நேரம் அவர் மட்டும் தனியாக இருப்பதைத் தெரிந்து கொண்ட ரமிசுதீனும், ரபீக்கும் அந்த பெண்ணின் கழுத்திலிருந்த தங்க செயினை பறித்துக் கொண்டு வன்கொடுமை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த பெண் உரத்த குரலில் கத்தவே அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்துள்ளனர். இதைப்பார்த்த இருவரும் காரில் ஏறி தப்பிச் சென்றனர். பிறகு பொதுமக்களும் காரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர்.
இவர்கள் பின்னால் வருவதைத் தெரிந்து கொண்டு காரை கணியூர் குறுக்கு சாலையில் ஓட்டிக் சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து பொதுமக்கள் காயத்துடன் இருந்த கொள்ளையர்களைப் பிடித்து போலிஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அப்பாவை வரவேற்கிறோம்...” - ஜெர்மனியில் முதலமைச்சரை உற்சாகமாக வரவேற்ற தமிழர்கள்!
-
உச்ச நீதிமன்றத்தின் 34 நீதிபதிகளில் ஒருவர் மட்டுமே பெண்... நீதிபதிகள் நியமனத்தில் பாகுபாடு என புகார் !
-
விமான நிலையத்தின் பொறுப்பாளராக ரூ. 232 கோடி முறைகேடு... CBI-யால் கைது செய்யப்பட்ட அரசு அதிகாரி !
-
ஜெகதீப் தன்கரின் அரசு இல்லத்தை காலி செய்ய ஒன்றிய அரசு உத்தரவு... புதிய வீடு ஒதுக்கப்படாததால் அதிர்ச்சி !
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !