India
நீ வேலைக்குப் போனா எனக்கு அசிங்கம்.. மனைவியை கொடூரமா தாக்கி Selfie எடுத்த கணவன்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப். இவர் ஆதிரா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான திலிப் வேலைக்கு எதுவும் செல்லாததால் குடும்பத்தைக் கவனிப்பதில் சிரமம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி ஆதிரா வேலைக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.
பிறகு அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்கு வேலைக்குச் சென்று வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட கணவர் திலீப் வேலைக்குச் செல்ல வேண்டும் என கூறியுள்ளார். இருப்பினும் தன் குழந்தைகளுக்காக ஆதிரா வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 17ம் தேதி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த திலீப் மனைவியுடன் சண்டைபோட்டுள்ளார். மேலும் அவரை கொடூரமா முகத்தில் தாக்கியுள்ளார். இதில் அவரது முகத்தில் ரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த காயத்துடன் இருந்த மனைவியுடன் சேர்ந்து தீலிப் செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளார்.
மேலும் மனைவியை மோசமாக திலீப் தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், கடனை அடைக்க நான் வேலைக்குச் செல்ல வேண்டும். இல்லை என்றால் என் குழந்தைகள் பட்டினி கிடக்கும் என ரத்தம் வழியும் முகத்துடன் அவர் பேசும் காட்சி காண்போரை பதறவைத்துள்ளது. பின்னர் போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீலிபை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
புயல் எச்சரிக்கை கூண்டு என்றால் என்ன? : ஏன் எற்றப்படுகிறது- எதை உணர்த்துகிறது!
-
சென்னையின் 22 சுரங்கப்பாதைகளிலும் நீர் தேக்கம் இல்லை! : சென்னை மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்ன?
-
விஜய் அனுப்பிய ரூ.20 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்!
-
“வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் ஆபத்தானது” : The Hindu நாளிதழ் தலையங்கம்!
-
மோன்தா புயல் : சென்னை - ஆந்திரா இடையே 9 விமானங்கள் ரத்து!