India

காவல்நிலையம் புகுந்து இளம் பெண் கடத்தல்: 2 மணி நேரத்தில் விரட்டி பிடித்த போலிஸ்: நடந்தது என்ன?

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் பிலாரா பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் காணவில்லை என அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், காணாமல்போன பெண் காவல்நிலையத்திற்கு வந்து 'நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன். என்னை யாரும் கடத்தவில்லை' என போலிஸாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அப்போது, மகள் காவல்நிலையம் வந்ததைத் தெரிந்து கொண்ட பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் அங்கு வந்து இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிக் கடத்திச் சென்றுள்ளனர்.

இதையடுத்து போலிஸார் மற்றும் இளம் பெண்ணின் கணவர் ஆகியோர் அந்த காரை 2 மணி நேரம் விடாமல் பின்தொடர்ந்து விரட்டி சென்றுபிடித்தனர். பின்னர் போலிஸார் இளம் பெண்ணை மீட்டு அவரது கணவரிடமே ஒப்படைத்தனர். பின்னர் பெண்ணை கடத்திய உறவினர்களை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: தொடரும் சோகம்.. நடனமாடும் போதே மயங்கி விழுந்து மீண்டும் மற்றொரு வாலிபர் உயிரிழப்பு!