India
ஆந்திரா : இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற 13 வயது சிறுவன்.. கல்லால் தாக்கி கொலை செய்ய முயற்சி !
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆடு வளர்க்கும் தொழில் செய்து வருகிறார். அவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவரின் 18 வயது இளம்பெண் ஆடுகளை மேய்த்துவந்துள்ளார்.
சம்பவத்தன்று அந்த இளம்பெண் தந்து கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுவன் அந்த பகுதிக்கு வந்து அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
பின்னர் சிறிது நேரத்துக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சிறுவனை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாக அந்த சிறுவன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார்.
சிறுவனின் செயலை அந்த இளம்பெண் தடுக்க முயன்ற நிலையில், ஆத்திரமடைந்த சிறுவன் தான் வைத்திருந்த கத்தியால் அந்த பெண்ணை கத்தியால் குத்தி அங்கிருந்த கல்லை எடுத்து அந்த இளம்பெண்ணை கடுமையாக தாக்கி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இளம்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டு அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த சிறுவனை போலிஸார் கைது செய்தனர்.
Also Read
-
குடும்பத்தினர் வருகையால் குதூகலமான BB வீடு : பாரு-கமரு தனி தனியா game ஆடுங்க என்று அறிவுரை கூறிய நண்பன்!
-
ரயிலுக்கு இடையே சிக்கிக் கொண்ட பெண் : உயிர் காத்த RPF வீரர் - குவியும் பாராட்டு!
-
வாக்குறுதி கொடுத்த அடுத்த நாளே 169 செவிலியர்கள் பணிநிரந்தரம் : ஆணைகளை வழங்கிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
கிறிஸ்துமஸ் விழாவில் இரட்டை வேடம் போடும் பா.ஜ.க : தி.க தலைவர் கி.வீரமணி ஆவேசம்!
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான 8 புதிய அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!