India

71 வயது முதியவருடன் நெருக்கமாகப் பழகி ரூ. 3 லட்சம் ஏமாற்றிய பெண்.. போலிஸில் சிக்கியது எப்படி?

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜி. இவரது ஆண் நண்பர்கள் மூலம் 71 வயது முதியவர் ஒருவர் அறிமுகம் கிடைத்துள்ளது. இதையடுத்து முதியவரும் ராஜியும் நெருக்கமாகப் பழகி வந்துள்ளனர்.

இதையடுத்து இருவரும் தனியாக அறையிலிருந்தபோது நெருக்கமாக இருந்ததை ராஜி, முதியவருக்குத் தெரியாமல் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து வைத்துள்ளார்.

பின்னர் இந்த படங்களைக் காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும் கூறியுள்ளார். இதனால் பயந்த முதியவர் ராஜி பணம் கேட்கும்போது எல்லாம் கொடுத்துள்ளார். இப்படி ராஜி அவரிடம் இருந்து ரூ. 3 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் ராஜியின் கொடுமை தாங்க முடியாமல் முதியவர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து ராசியைக் கைது செய்தனர். முதியவர் வசதியானவர் என தெரிந்து கொண்டு திட்டம் போட்டு ராஜி பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் முதியவரைப் போன்று வேறு யாரிடம் எல்லாம் ராஜி பணம் பறித்து ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Also Read: வீட்டை விட்டு ஓடிய மாணவன்.. ஒரு வருடத்திற்கு பின் மும்பையில் மீட்ட போலிஸ்: ஆனந்தக் கண்ணீரில் பெற்றோர்!