India
ஒடிசாவை உலுக்கும் Honey trap வழக்கு.. பெண்ணின் அந்தரங்க வலையில் சிக்கிய பா.ஜ.க உள்ளிட்ட கட்சி தலைவர்கள்!
ஒடிசா திரைப்பட தயாரிப்பாளராக இருப்பவர் அக்ஷயா பரிஜா. இவர் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் அக்ஷயா பரிஜா இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், தயாரிப்பாளர் அக்ஷயா பரிஜா அர்ச்சனா மற்றும் ஷ்ரதாஞ்சலி ஆகிய இரண்டு பெண்கள் ரூ. 3 கோடி பணம் கேட்டு மிரட்டுவதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதேபோல் அர்ச்சனா மீது மற்றொரு பெண்ணும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், தனது அந்தரங்க படங்களை காட்டி மிரட்டுவதாக தெரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலிஸார் அர்ச்சனா குறித்து விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அர்ச்சனா கொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், சினிமா தயாரிப்பாளர்கள் என பிரபலமானவர்களைக் குறிவைத்து அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். மேலும் அவர்களுடன் தனியாக அறையிலிருந்தபோது அதை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார்.
பின்னர் இந்த வீடியோக்களை காட்டி அவர்களிடம் பணம் பறித்துள்ளார். இந்த குற்றங்கள் அனைத்திற்கும் அவரது கணவர் ஜகபந்து சந்து உடந்தையாக இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து புவனேஸ்வரில் உள்ள அவரது வீட்டில் இருந்து 4 செல்போன்கள், 2 டேப்லெட்டுகள், ஒரு லேப்டாப் மற்றும் பென்டிரைவ் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளது. இதில் ஆய்வு செய்த போது பல முக்கிய பிரபலங்களின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சிக்கியுள்ளன.
குறிப்பாக ஒடிசா மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.டி கட்சித் தலைவர்கள் மற்றும் பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டவர்களை அர்ச்சனாவின் வலையில் சிக்கியது தெரியவந்துள்ளது. இதனால் இந்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!