India
உ.பி :கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.. பெண்ணின் தங்கை வந்ததால் தப்பிய உயிர் !
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நாக்லாஷிஷாம் என்ற கிராமத்தில் 19 வயது கல்லூரி மாணவி தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரி மாணவியின் தந்தையும் வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார். தாயும் ஆக்ராவுக்கு உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். சகோதரியும் வெளியே சென்றுள்ளார்.
இந்த தருணத்தில் கல்லூரி மாணவி தனியே இருப்பதை அறிந்த புஷ்பேந்திரா என்ற அதே பகுதியை சேர்ந்த இளைஞர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டில் நுழைந்து தனியே இருந்த கல்லூரி மாணவியை சரமாரியாக தாக்கி பின்னர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த நிகழ்வை வெளியே சொல்லிவிடுவார் என அஞ்சிய அந்த இளைஞர் கல்லூரி மாணவியை கழுத்தை நெரித்து தூக்கில் ஏற்ற முயன்றுள்ளார். அப்போது திடீரென அந்த கல்லூரி மாணவியின் சகோதரி வீட்டுக்கு வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளார்.
வெகுநேரம் ஆகியும் கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் ஜன்னல் வழியேவீட்டுக்குள் பார்த்துள்ளார். அப்போது ஒருவர் தனது சகோதரியை தூக்கில் ஏற்ற முயன்றுள்ளது தெரியவந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கூச்சல் போட்டுள்ளார். இதனை எதிர்பாராத அந்த இளைஞர் கல்லூரி மாணவியை அப்படியே விட்டு ஓடியுள்ளார்.
இது தொடர்பாக காவல்நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில்,சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!