India
ராஜஸ்தான்: தூங்கிக்கொண்டிருந்த கணவரை கொலை செய்த மனைவி.. 30 லட்சம் இன்சூரன்ஸ் பணத்துக்காக நடத்த பயங்கரம் !
ராஜஸ்தான் மாநிலத்தின் நாகெளர் மாவட்டத்திலுள்ள குந்தியா என்னும் கிராமத்தில் நேமாராம் மகத் (67), என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சாரதா (47). இந்த தம்பதியினர் ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர்.
இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி சொத்துகுறித்த சண்டை எழுந்து வந்துள்ளது.தன்னுடைய கணவன் பெயரிலிருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள நிலத்தை தன் பெயரில் மாற்றக்கோரி சாரதா அடிக்கடி கணவரிடம் சண்டை போட்டுவந்துள்ளார்.
இதேபோன்ற சண்டை மீண்டும் வந்தநிலையில், மனைவி மேல் ஆத்திரமடைந்த கணவர் நேமாராம் தன் மனைவியின் காலை உடைத்துள்ளார். இது தொடர்பாக மனைவி தொடர்ந்த புகாரின் அடிப்படையில் வழக்கு நிலுவையில் இருந்துவருகிறது.
இதைத் தொடர்ந்து சாரதா ரூ.30 லட்சம் இன்சூரன்ஸ் ஒன்றை தனது கணவர் பெயரில் செய்துள்ளார். இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் நேமாராம் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது கணவன் மனைவிக்கும் இடையே மீண்டும் சொத்து தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நேமாராம் மனைவியை கடுமையாக அடித்துள்ளார்.
பின்னர் போதையில் அங்கேயே நேமாராம் படுத்து துங்கியுள்ளார். அப்போது மனைவி சாரதா கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து இன்சூரன்ஸ் பணத்துக்காக சாரதா கணவரை கொலை செய்ததாக நேமாராமின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதன்படி வழக்கு பதிவு செய்து போலிஸார் சாரதாவிடம் நடத்திய விசாரணையில் இன்சூரன்ஸ் பணத்துக்காக தன்னுடைய கணவரைக் கொலைசெய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மாற்றுத்திறனாளிகளின் ஒளிமயமான வாழ்வுக்கு நாம் அனைவரும் பாடுபடுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டம் : தமிழ்நாடு முழுவதும் 9,86,732 பேர் பயன்!
-
கனமழையில் இருந்தும் உள்ளூர் மக்களை மட்டுமல்ல; கடல் கடந்து சென்றவர்களையும் காத்த தமிழ்நாடு அரசு : முரசொலி!
-
டிட்வா புயல் : சென்னை கட்டுபாட்டு மையம், புரசைவாக்கத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
-
IT ஊழியர்கள் பணிச்சுமை குறித்த கேள்வி.. ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் ஒன்றிய அமைச்சர் - சு.வெ. விமர்சனம்!