India
இந்திய வான்எல்லையில் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. துரிதமாக செயல்பட்ட இந்திய விமானப்படை !
சமீப காலமாக விமானங்களுக்கு போலியான வெடிகுண்டு மிரட்டல் விடுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக எதிர்பாராத அதிர்ச்சி, தாமதம் போன்ற செயல்கள் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அதுபோன்ற ஒரு சம்பவம் இந்திய வான் எல்லையில் நடைபெற்றுள்ளது.
ஈரானின் தெஹ்ரான் நகரில் இருந்து சீனாவில் உள்ள குவாங்சூ நகருக்கு ஈரான் நாட்டை சேர்ந்த விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் இந்திய வான்பரப்பில் பயணித்தபோது அதற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் இந்திய அதிகாரிகளுக்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் விமானப்படைக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்படி பாதுகாப்பு விதிகளின்படி இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானங்கள் பாதுகாப்பான தொலைவில் அந்த விமானத்தை பின்தொடர்ந்துள்ளது.
இந்திய விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் சார்பில் பாதுகாப்பு காரணத்துக்காக ஜெய்ப்பூர் உள்ளிட்ட சில விமான நிலையங்களில் தரையிறங்க பரிந்துரை வழங்கப்பட்டது. ஆனால், குண்டு மிரட்டலை புறக்கணிக்குமாறு தெஹ்ரானில் இருந்து தகவல் கிடைத்ததால் ஈரான் விமானம் இந்தியாவில் தரை இறங்காமல் சீனாவை நோக்கி தொடர்ந்து சென்றது.
எனினும் ஈரான் விமானம் இந்திய எல்லையை கடந்து செல்லும் வரை இந்திய விமான படையால் உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய வான்வெளியில் ஈரான் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“முதல்முறையாக கூட்டுறவுக்காகவே ‘கூட்டுறவு கீதம்!’ இயற்றப்பட்டுள்ளது!” : அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்!
-
ரோடு ஷோ - தமிழ்நாடு அரசின் வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
-
பீகார் தேர்தல் - குளறுபடிகளுக்கு இடையே நிறைவடைந்த முதற்கட்ட வாக்குப்பதிவு! : 2ஆம் கட்டத் தேர்தல் எப்போது?
-
”NDA கூட்டணி அரசை பீகார் மக்கள் தூக்கி எறிவார்கள்” : பரப்புரையில் பிரியங்கா காந்தி MP பேச்சு!
-
தமிழ்நாடு முழுவதும் நவ.11 அன்று SIR-க்கு எதிராக ஆர்ப்பாட்டம்! : மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி அறிவிப்பு!