India
சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவன்.. சக நண்பர்கள் வெறிச்செயல்.. டெல்லியில் அதிர்ச்சி !
டெல்லியில் 12 வயது சிறுவனை அவனது சக நண்பர்களே கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்தனர். மேலும், அவரின் பிறப்புறுப்பில் கம்பியை திணித்து கொலை செய்யவும் முயன்றுள்ளனர். பின்னர் அந்த சிறுவன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர் பகிர்ந்த ட்விட்டர் பதிவில், "தலைநகர் டெல்லியில் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண் குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பில்லை. 12 வயது சிறுவன் 4 பேரால் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டுள்ளார்.
சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து மகளிர் ஆணையம் சார்பில் டெல்லி காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தற்போது குற்றவாளிகள் 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாகியிருக்கும் மீதியுள்ள மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலிஸார் "பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பம் கடன் வாங்கியதாகவும் சரியான நேரத்தில், அதை திருப்பி செலுத்தாததால் இப்படி செய்ததாகவும் சிறுவனின் தாயார் வாக்குமூலம் அளித்ததாக கூறினர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனை தாக்கிய இரண்டு சிறுவர்கள் மற்றும் உறவினர் ஒருவரும் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறுவன் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!